போதைக்கு அடிமையான சவுதி பட்டத்து இளவரசர்: வழங்கப்பட்ட தண்டனை...


போதை பழக்கத்துக்கு அடிமையான சவுதியின் பட்டத்து இளவரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருந்தவர் முகமது பின் நயீப் (57).

இளவரசர் முகமது பின் நயீப் போதை மருந்துக்கு அடிமையாகியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த மாதம் 21ஆம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மெக்காவில் உள்ள அரண்மனையில் முகமது நயீப்பை சவுதி மன்னர் சல்மான் சந்தித்துள்ளார்.

அப்போது, போதை மருந்து உட்கொள்வதை நீங்கள் நிறுத்தவில்லை மற்றும் அதற்கான சிகிச்சையும் எடுத்து கொள்ளவில்லை.

இதனால், உங்கள் பதவிக்கு வேறு நபரை நியமிக்க போகிறேன் என சல்மான் கூறியுள்ளார்.

மேலும், அரண்மனையிலேயே சிறை வைக்கப்பட்ட முகமது நயிப்பின் பாதுகாவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னர் நடந்த கவுன்சில் கூட்டத்தில் முகமது பின் நயிப் அதிகாரபூர்வமாகப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து பட்டத்து இளவரசராக சல்மானின் மகன் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டார்.

பதவி இழந்த இளவரசர் முகமது பின் நயீப்பை, சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv