கணவராக நினைத்து கன்றுடன் வாழ்க்கை...உலகப் பிரபலமான பாட்டி....


கம்போடியாவில் பாட்டி ஒருவர் இறந்த போன கணவராக நினைத்து 5 மாத கன்றுடன் வாழ்ந்து வருவது உலக பிரபலமடைந்துள்ளது.

Kratie மாகாணத்தை சேர்ந்த 74 வயதான Khim Hang என்ற பாட்டியே இவ்வாறு கன்றுடன் வாழ்ந்து வருகிறார்.

Khim Hangயின் கணவர் Tol Khut ஓர் ஆண்டிற்கு முன் இறந்த நிலையில் புதிதாகப் பிறந்த பசுவின் கன்றை, இறந்துபோன தனது கணவராகவே நினைத்து வாழத் தொடங்கியிருக்கிறார் Khim Hang.

இதை கண்ட அண்டை வீட்டுக்காரர்களுக்கு இவரது செயல் மிகவும் வியப்புக்குரியதாகி இருக்கிறது. இதுபற்றி யாராவது கேட்டால், கன்று தனது கணவரின் மறுபிறவி என கூறியுள்ளார்.

இதுகுறித்து Khim Hang கூறியதாவது, தனது கணவர் உயிரோடு இருந்தபோது செய்தது போலவே கன்று செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொழுவத்தில் இருக்கவேண்டிய கன்று, இப்போது படுக்கையறையில் மெத்தை, தலையணையுடன் சொகுசாகத் தங்கியிருக்கிறது. பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த கன்றை காண தினமும் 100க்கு மேற்பட்டோர் தனது வீட்டிற்கு வந்து போவதாக Khim Hang குறிப்பிட்டுள்ளார்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv