இரும்பை தங்கமாக்கும் சித்தர்கள்: எங்கு உள்ளார்கள் தெரியுமா?


நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை மிகவும் அச்சுறுத்தலான மலையாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மலையின் உயரமே ஏறக்குறைய 1300 மீ தான்.
மனித உருவில் அவதரித்த கொல்லிப்பாவை கோயில் இந்த மலையில் அமைந்துள்ளதால், இந்த மலைக்கு கொல்லிமலை எனும் பெயர் ஏற்பட்டது.

இந்த கொல்லிப்பாவை கோவிலானது, சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே அந்த மலைத் தமிழர்களின் தெய்வமாக இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கொல்லிப்பாவை கடவுளுக்கு சிலையோ, சிற்பமோ இல்லை. அது கையால் வரையப்பட்ட ஒரு ஓவியமே. அந்த ஓவியத்தை தான் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த மலையில் நிறைய சித்தர்கள் வாழ்வதாகவும், பவுர்ணமி காலங்களில் அவர்கள் கண்களுக்கு தெரிவதாகவும் கூறப்படுகிறது.
கொல்லிப்பாவை கோவிலின் அருகில் உள்ள மீன்பள்ளி ஆற்றை, இறைவன் தான் மீன் வடிவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இதன் அருகிலேயே ஆகாய கங்கை எனும் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. இது கொல்லிமலையின் பல மூலிகைகளை கொண்டுள்ளது.
இந்த அருவியிலிருந்து சற்று தள்ளி, கோரக்கர், காளங்கிநாதர் எனும் சித்தர்களின் குகைகள் உள்ளது. அந்த குகையில் சித்தர்களை இருப்பதை காணலாம்.
இந்த கொல்லிமலைக்கு வருபவர்கள், 100 ஆண்டுகள் வாழ்வதற்கு உதவும் மூலிகை மற்றும் இரும்பை தங்கமாக மாற்றும் ரகசியம் தெரிந்த சித்தர்களையும் தேடி வருவதாக கூறப்படுகிறது.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv