பாண்டா வடிவத்தில் இராட்சத சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம்!


சுவட்டு எரிபொருட்கள் வெகுவாக குறைவடைந்து வருவதனால் எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்பது வெளிப்படையானது.

இதனைக்கருத்தில் கொண்டு பல நாடுகள் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்னை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இதில் சீனாவும் ஏற்கனவே நீரில் மிதக்கக்கூடிய சூரிய மின்சக்தி நிலையம் உட்பட மேலும் சில இராட்சத சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நிறுவியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு வினோத மின்சக்தி உற்பத்தி நிலையத்தினை அமைத்துள்ளது.

அனேகமான நாடுகள் தமது சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் சோலார் படலங்களை நிரல், நிரை வடிவில் அமைத்துள்ளன.

இதே போன்ற வடிவில்தான் சீனாவும் ஏற்கணவே தனது சோலார் படலங்களை நிறுவி வந்துள்ளது.

ஆனால் முதன் முறையாக ஒரு பாண்டா விலங்கின் வடிவத்தில் தனது இராட்சத சோலார் படலங்களை நிறுவியுள்ளது.

Datong நகரத்தில் 248 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம் மின்சக்தி நிலையத்தினை China Merchants New Energy Group வடிவமைத்துள்ளது.

கடந்த ஜுன் 30 ஆம் திகதி நிர்மாணிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதன் ஊடாக 50 மெகாவாட்ஸ் மின் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv