900 கார்கள் தீயிட்டு எரிப்பு....போராட்டத்தில் 370 பேர் கைது....


பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 900 கார்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 300 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ம் ஆண்டு நிகழ்ந்த பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் யூலை 14-ம் திகதி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

இதன் அடிப்படையில், நேற்று முன் தினம் பாரீஸில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியான மெலினியா ஆகிய இருவரும் பங்கேற்றுள்ளனர்.

அதே சமயம், யூலை 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் புரட்சியை கண்டித்து போராட்டமும் நடைபெறுவது வழக்கமாகும்.

கடந்த இரண்டு தினங்களில் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 897 கார்கள் சேதமடைந்துள்ளன.

இவற்றில் 631 கார்கள் தீயிட்டு முற்றிலுமாக எரிக்கப்பட்டன. எஞ்சிய 266 கார்கள் தீவிபத்தில் சேதம் அடைந்துள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 50 கார்கள் கூடுதலாக தீயிட்டு எரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு இதே நாட்களில் 951 கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

கடந்த இரு தினங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்ட காரணத்தினாலும் பொதுச் சொத்துக்களை சேதப்படத்திய குற்றங்களுக்காகவும் 368 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv