5 நாடுகளுக்கு எச்சரிக்கை....நுரையீரல் தொற்றால் 100000 குழந்தைகள் மரணம்:


சீனா, நைஜிரியா, இந்தோனேசியா உள்ளிட்ட 5 நாடுகளில் மட்டும் நுரையீரல் தொற்றால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மரணமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் நாயர் தலைமையிலான குழு மூச்சு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஆண்டுக்கு 3 கோடியே 30 லட்சம் குழந்தைகள் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சீனா, நைஜிரியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நோய் சுவாச உறுப்புகளை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது.

குறிப்பாக குழந்தைகளின் 2-வது வயதில் அதிக அளவில் தாக்குகிறது எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுரையீரல் தொற்று நோயால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மேற்கண்ட 5 நாடுகளில் இறக்கின்றனர் என சுட்டிக்காட்டும் அந்த ஆய்வறிக்கையில்,

இந்த எண்ணிக்கையானது நோயினால் சர்வதேச அளவில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பாதி அளவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி இந்த நோயில் இருந்து மருந்து மாத்திரைகள் மூலம் குழந்தைகள் இறப்பை தடுக்க முடியும் எனவும், அதற்கான மருந்து இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஹரீஷ் நாயர் தெரிவித்துள்ளார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv