வாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா?


சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று வாழ விரும்பாத முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ள உதவும் புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நபர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.

இதுபோன்ற ஒரு சேவையை அரசு அனுமதி பெற்ற Exit என்ற நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் உதவியுடன் குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்கள் சட்டப்பூர்வமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.

ஆனால், இச்சேவையை மேலும் விரிவுப்படுத்த நிறுவனம் ஒரு புதிய குழுவை உருவாக்கியுள்ளது.

அதாவது, வயதான முதியவர்கள் தங்களது வாழ்க்கையை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறும்போது அவர்களே தற்கொலை செய்து கொள்ள இப்புதிய சேவை உதவி செய்கிறது.

ஆனால், இதுபோன்ற ஒரு சேவையை வழங்க அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

எனினும், இச்சேவையை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்ய எக்ஸிட் இந்த குழுவை தற்போது உருவாக்கியுள்ளது.

இதன் மூலம், வயதான நபர்கள் உண்மையில் தங்களது விருப்பத்தின் பேரில் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறார்களா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு இப்புதிய சேவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எக்ஸிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv