செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தன: நாசா விஞ்ஞானிகள்....


செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என நாசா பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இதற்காக கடந்த 2012ம் ஆண்டு நாசா கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தை அனுப்பியது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்துவரும் ரோவர் விண்கலம் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.இதன்மூலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

எனினும் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறதா என்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv