முட்டை எப்படி உருவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?


முட்டை உருவாவது சிக்கலான ஒன்று தான், கருப்பையிலும், முட்டை குழாயிலும் முட்டை உருவாகிறது.

கோழிக்கு உடலின் இடதுபுறத்தில் கருப்பை உள்ளது, ஒரு சில கோழிக்கு இரண்டு கருப்பைகள் கூட உண்டு.

ஒரு கோழி தனது எட்டு ஆண்டு கால ஆயுளில் சுமார் 1500 முட்டைகள் இடுகிறது.

ஒரு கோழியின் முட்டை உற்பத்தியாகும் நடைமுறை இரண்டே முக்கால் மணிநேரத்தில் பூர்த்தியாகிறது, கோழி முட்டை இட்டு ஒரு மணிநேரத்துக்குளாக மற்றோர் மஞ்சள் கரு முழுமையாக முற்றிவிடுகிறது.

அப்போது அதில் 6 அடுக்குகள் அடங்கியிருக்கும், மஞ்சள் கரு கரு முழுமையாக முதிர்ச்சி அடைந்ததும், முட்டை குழாய்க்குள் விழுந்து விடுகிறது.

முட்டை குழாய்க்குள் பல பிரிவுகள் உள்ளது, முதல் பிரிவில் முதிர்ச்சியடைந்த மஞ்சள் கரு வளர்கிறது.

அடுத்த பிரிவில் வெளிப்புறத்தில் ஒன்றும், உட்புறத்தில் ஒன்றுமாக இரண்டு சவ்வுகள் உருவாகின்றன.

இது நடைபெற சுமார் ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்கிறது, இதன்பின்னர் முட்டை கருப்பை அடங்கியிருக்கும் சுரப்பிக்கு செல்கிறது, அங்கு 19 மணிநேரம் தங்குகிறது, அடுத்த 14 மணிநேரத்தில் முட்டை ஓட்டின் பல அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன.

பின்னர் முட்டை வெளியே மெல்லிய தோல் உருவாகிறது, இதுவே முட்டை நிறத்தை கொடுக்கிறது. இப்படியாக பல நிலைகளில் முட்டையானது உருவாகிறது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv