கனடாவில் தமிழர்கள் நிகழ்த்தும் வரலாற்று சாதனை: குவியும் வரவேற்பு....


கனடா நாட்டு வரலாற்றில் முதன் முதலாக 1,000 தமிழர்கள் ஒன்றாக இணைந்து பரத நாட்டியம் ஆடி சாதனைப் படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் எதிர்வரும் யூன் 24-ம் திகதி 150-வது நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கு கனடாவில் இயங்கி வரும்’ கனடிய தமிழர்கள் கலை மற்றும் கலாச்சார அமைப்பு’ ஒரு வரலாற்று நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Scarborough நகரில் ஒரு மாபெறும் பரத நாட்டிய கச்சேரியை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதே நகரில் உள்ள L’Amoreaux Sports Complex என்ற விளையாட்டு மைதானத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடனத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் அனைவரும் கனடாவின் தேசியக் கொடியை தங்களது நடனத்தின் மூலம் பிரதிபலிப்பார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்து அமைப்பின் இயக்குனரும், இணை நிறுவனருமான Pararajasingam என்பவர் பேசியபோது, ‘கனடா வரலாற்றில் தமிழர்கள் நிகழ்த்தும் ஒரு மாபெரும் சாதனை இந்த பரத நாட்டிய நிகழ்வு ஆகும்.

இந்நிகழ்வில் Brampton மற்றும் Mississauga ஆகிய நகரங்களில் இருந்து 350 தமிழர்களும், Toronto, Scarborough மற்றும் Markham ஆகிய நகரங்களில் இருந்து 650 தமிழர்களும் இந்த நடனத்தில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் மிகப்பிரபலமான மதுரை ஆர் முரளிதரன் என்பவர் இந்நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று இசையும் நடனமும் அமைக்கிறார்.

இந்நிகழ்விற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழர்களுக்கும் கனேடிய மக்களுக்கும் இடையே உள்ள நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சி மூலம் சுமார் 50,000 டொலர் நிதி திரட்டி அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக Pararajasingam தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv