இரத்தத்தை குடித்து அன்பை பரிமாறும் காதல் ஜோடி...


சினிமா, நாவல்களில் வரும் ரத்தம் குடிக்கும் ட்ராகுலா போன்று நிஜமாகவே வாழ்ந்து வரும் ஒரு இத்தாலிய ஜோடி குறித்த தகவல் இணையத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திகில் படங்கள் போன்று திகில் சம்பவங்களை விரும்பும் இத்தாலிய காதல் ஜோடி ஒன்று அவர்களுடைய இரத்தத்தை ஒருவருக்கொருவர் பருகும் சம்பவத்தை கேள்விப்பட்டு பலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டென்னிஸ் (30) என்பவருக்கு இலரியா (20) என்ற இளம்பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவருவரும் ஒருவருக்கொருவர் பேஸ்புக்கில் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

இதில் ஒருவருக்கொருவர் ஈர்ப்பு ஏற்பட்டு அவர்கள் நாளடைவில் நண்பர்களாகினர். பின்னர் ஒருவருக்கொருவர் காதலர்களாகவும் மாறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தையும், நேசத்தையும் பரிமாற்றிக் கொள்வதற்கு ஏற்ற வழியாக டெனிஸ் ஆல்பர்ட்டோ மற்றும் அவரது பெண் தோழி தெரிவு செய்தது ஒருவரது ரத்தத்தை மற்றவர் குடிப்பதுதான்.

ஆனால் கதைகளில் வருவதைப் போல் நேரடியாகக் கழுத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதற்கு பதில் சிரிஞ்சுகளையும், ஊசிகளையும் இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு Vampire போன்று காட்சியளிப்பதற்காக, அவர்களுடைய பற்களை பல் மருத்துவர்களை கொண்டு கூர்மையாக்கியுள்ளனர்.

மட்டுமின்றி வேம்பயர் போன்று காட்சியளிப்பதற்கு ஏதுவான ஆடைகளையே தெரிவு செய்து அவர்கள் அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv