பழைய துணிகளை வைத்து கோடிகளில் வியாபாரம்: சாதிக்கும் தொழிலதிபர்....


பழையதாகி தூக்கி எறியப்படும் ஹொட்டல் படுக்கை விரிப்புகள் மற்றும் மேசை விரிப்புகளை வைத்து என்ன செய்ய முடியும் என நாம் நினைப்போம்.

ஆனால் இதை வைத்து கோடிகளில் தொழில் செய்து சம்பாதிக்கலாம் என நிரூபித்துள்ளார் ஜெய்தீப் சஜ்தே.

ஆந்தெடிக் இம்பெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் ஜெய்தீப். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் ஆந்தெடிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவரது குடும்பத்தார் மேற்கத்திய நாடுகளில் தூக்கி எறியப்படும் கம்பளி ஸ்வெட்டர்களை இறக்குமதி செய்து அதில் இருந்து கம்பளி இழைகளை பிரித்தெடுக்கும் தொழிலை செய்து வந்தார்கள்.

அங்கு கிடந்த படுக்கை விரிப்புகளை வைத்து ஏதாவது உருப்படியாக செய்யலாம் என ஜெய்தீப் நினைத்திருந்த தருணத்தில் தான் அதை வைத்து அழகான துணிப்பைகளாக மாற்றும் தொழில் குறித்த யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.

இதையடுத்து தனது குடும்பத்தினர் கொடுத்த 15 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிலை தொடங்கிய ஜெய்தீப்பிடம் ஆரம்பத்தில் 12 தொழிலாளர்கள் வேலை செய்தனர். தற்போது இது 60தாக உயர்ந்துள்ளது.

ஜெய்தீப் பழைய படுக்கை விரிப்புகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்கிறார். தானேவில் உள்ள தன்னுடைய தொழிற்கூடத்தில் அவற்றை துணிப்பொருட்களாக மாற்றுகிறார்.

இது குறித்து ஜெய்தீப் கூறுகையில், உலக இயற்கையான நிதியம் 70 கிராம் எடை உள்ள துணிப்பை செய்ய 1000 லிட்டர் தண்ணீர் தேவை என்கிறது.

மேலும், ஒரு கிலோ இழை தயாரிப்பதன் மூலம் 7 கிலோ அளவிலான கார்பன் டை ஆக்சைடு, வளிமண்டலத்தில் விடப்படுகிறது என இன்னொரு கணக்கு சொல்கிறது.

எங்கள் நிறுவனத்தின் விற்பனையை விட குறைந்த காலத்தில் நிகழ்த்தி இருக்கும் சமூக பங்களிப்பு எனக்கு உற்சாகம் அளிக்கிறது - ஜெய்தீப்
இதன்படி பார்த்தால் நாங்கள் 2.2 பில்லியன் லிட்டர்கள் தண்ணீரை சேமித்துள்ளோம். 1.1 பில்லியன் கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதைக் குறைத்துள்ளோம் என ஜெய்தீப் கூறுகிறார்.

பல முன்னணி கடைகளில் விற்பனைக்கு வரும் அந்தெடிக் நிறுவனத்தின் பொருட்கள் 29 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரை விலையில் விற்பனையாகிறது.

இந்நிறுவனத்தின் பொருட்கள் மீது ’ஐ ஆம் நாட் வெர்ஜின்’ என்றும் ’ஐ ஆம் சோ வேஸ்டட்’ என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் 20 டன் பழைய துணிகளின் மூலம் 100,000 புதிய பொருட்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

தொழில் தொடங்கிய 2011 - 2012 ஆண்டில் ஆந்தெடிக் நிறுவனத்தின் விற்பனை மதிப்பு 50 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 4 கோடியாக உயர்ந்துள்ளது.

அந்தெடிக் நிறுவனம் தயாரிக்கும் பைகளின் மீது பார்பி வடிவத்தை பயன்படுத்த பொம்மை நிறுவனமான மேட்டலிடம் அந்தெடிக் உரிமையை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் கிளப் கமிட்டி உறுப்பினரான ஜெய்தீப் தொழில் பரபரப்பிலும் வாரக்கடைசியில் பிராபோர்ன் அரங்கில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்காக கொண்டுள்ளார்
ஜெய்தீப் மனைவி ரேகா, அவர்கள் நிறுவனத்தின் கணக்குகளை கவனித்து கொள்கிறார். இந்த தம்பதிகளின் இரு மகள்களான ஷனயா (16) ஷிலோகா (15) ஆகியோர் நிறுவனம் தயாரிக்கும் பைகளின் புதிய டிசைன்கள் பற்றி தந்தையிடம் கருத்துக்களை கூறுவார்கள்.

அவர்கள் சொல்வதை கேட்டு தான் ஜெய்தீப் முடிவுகளை எடுக்கிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv