அமெரிக்காவில் 12 வயதில் செவிலியரான சிறுமி....


அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவர் தனது தாயின் பிரசவத்திற்கு மருத்துவர்களோடு சேர்ந்து உதவி செய்துள்ளார்.

ஜேஸி டெலபீனா என்ற சிறுமி தனது தாயின் பிரசவத்தின் போது மருத்துவ ஆடை அணிந்து மருத்துவர்களோடு சேர்ந்து அறுவை சிகிச்சை அறையில் இருந்துள்ளார்.

அங்கு, தொப்புள்கொடியை அகற்றுவது போன்ற பணியை செய்துள்ளார், ஜேஸிக்கு 3.3 கிலோ எடையில் அழகிய தம்பி பிறந்துள்ளான், எனது தம்பி பிறந்தபோது நான் அருகில் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அந்த சந்தோஷத்தில் நான் அழ ஆரம்பித்துவிட்டேன் என்று ஜேஸி கூறியுள்ளார்.

குழந்தையின் தாயான டேட் கேரவே, தனது மகளின் முகத்தில் தென்பட்ட உணர்ச்சிகள் தனக்கு கண்ணீர் வரவழைத்ததாக தெரிவித்தார். ''எனக்கு அது சிறப்பான தருணமாக இருந்தது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை கேரவேவின் நண்பர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார், இதனைப்பார்த்த பலரும், 12 வயது சிறுமியை இதுபோன்று அறுவை சிகிச்சை அறைக்குள் பிரவசத்தின் போது வைத்துக்கொண்டது சரிதானா? என பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்த அழகான மற்றும் நெகிழ்வான தருணத்தை தாயும், மகளும் என்றும் நினைவில் கொண்டிருப்பர் என்று பதிலளித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv