விசித்திரமான நோயால் என்றும் இளமையாக தோன்றும் இளைஞன்...


குரோசியா நாட்டில் விசித்திரமான நோயால் தாக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் இளமை குன்றாமல் சிறுவன் போலவே வாழ்ந்து வருகிறார்.

குரோசியாவில் Zagreb பகுதியில் வாழ்ந்து வருபவர் 23 வயதான Tomislav Jurcec. இவர்தான் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது 10 வயது சிறுவன் போலவே என்றும் இளமையுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் இவரது இந்த நிலையை ஒரு வரமாகவே கருதப்படுவதாக Jurcec தெரிவித்துள்ளார். இதனால் தற்போது உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளதாம்.

மட்டுமின்றி புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட Jurcec அதுபோன்ற வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பொருட்களை வாங்கும்போது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமயங்களில் மதுபான விடுதிக்கு செல்லும்போது பலமுறை இவரது நண்பருக்கு பொதுமக்களால் திட்டு விழுந்துள்ளதாக கூறும் இவர், எப்படி ஒரு சிறுவனுக்கு மது அளிக்கலாம் எனவும் பொதுமக்கள் அக்கறையுடன் கேள்வி கேட்பதை ரசனையுடன் இவர் கேட்டிருப்பாராம்.

தற்போது Game of Thrones தொடர்களில் நடித்துவருவதாக கூறும் இவர் 'Hero Corpse Child'என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv