இதோ வந்துவிட்டது புதிய சோலார் பெயின்ட்: இனி சுவர்களிலிருந்தும் மின்னைப் பெறலாம்!


சூரிய ஒளியிலிருந்து மின்னைப் பெற்றுக்கொள்வது தற்போது அதிகரித்துவரும் நிலையில் அதனைப் பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதில் சோலார் பெயின்ட் முறையும் ஒன்றாகும்.

அவுஸ்திரேலியாவில் காணப்படும் Royal Melbourne Institute of Technology (RMIT) நிறுவனத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றே இப் புதிய பெயின்ட்டினை கண்டுபிடித்துள்ளது.

இப் புதிய பெயின்ட்டில் இரு வகையான கலைவைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்று ஏற்கனவே உள்ள பெயின்ட்களில் பயன்படுத்தப்படும் Titanium Oxide, மற்றையது Synthetic Molybdenum-Sulphide ஆகும்.

இக் கலவையைக் கொண்ட குறித்த பெயின்ட் ஆனது சூரிய சக்தியினை அகத்துறுஞ்சக்கூடியதாக இருப்பதுடன், சுற்றுச் சூழலில் உள்ள ஈரப்பதனையும் அகத்துறுஞ்சக்கூடியதாக காணப்படுகின்றது.

எனினும் இப் பெயின்ட் ஆனது வியாபார நோக்கத்தில் அறிமுகமாவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv