லண்டன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரிப்பு...


லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள Grenfell Tower குடியிருப்பில் கடந்த புதன்கிழமை அன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டமாக தெரியவந்தது. பின்னர், நேற்று வெளியான தகவலில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் சோதனை செய்து வரும் பொலிசார் இன்று வெளியிட்டுள்ள தகவலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இவர்களில் 5 பேரிடன் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், ஆனால், இது குறித்து தகவலை வெளியிட முடியாது என பொலிசார் மறுத்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியான Stuart Cundy என்பவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘கட்டிடம் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இச்சூழலில் விரைவாக தேடுதல் பணியை முடக்கி விடுவது ஆபத்தை ஏற்படுத்தும்.

கட்டிடத்திற்குள் உயிரிழந்தவர்களின் சிலரை அடையாளம் காண்பது சிரமாக உள்ளது. எனவே, தேடுதல் பணி சில வாரங்கள் வரை தொடரும்’ என தெரிவித்துள்ளார்.

தீ விபத்து நிகழ்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் கட்டிடத்திற்குள் பலியாணவர்களின் எண்ணிக்கை 100 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொலிசார் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv