சுவிட்சர்லாந்தில் 7000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு...


சுவிட்சர்லாந்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 7000 ஆண்டுகள் பழமையான கல்லறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சியான் பகுதியில் கலாச்சார மையம் ஒன்றிற்கான கட்டுமான பணி நடைபெற்ற நிலையில், அங்கிருந்து மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் பலவற்றை கண்டுபிடித்துள்ளனர்.

அதில் கல்லறை ஒன்றும் சில குடியிருப்புகள் இருந்தமைக்கான அடையாளங்களும் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளானது கற்காலத்தில் வாழ்ந்திருந்த மனிதர்களின் உடல் உறுப்புகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கலாச்சார மையத்திற்காக துவங்கப்பட்ட கட்டுமான பணிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைக்கவும், குறித்த பகுதியை தொல்பொருள் ஆய்வாளர்கள் முழுமையாக ஆய்வு செய்யும் வரை அப்பகுதியை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து கிடைக்கப்பெறும் சான்றுகள் அனைத்தும் கற்காலம் தொடர்பில் புதிய கருத்தாக்கத்திற்கு வழிகோலும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv