சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி 44 அகதிகள் பலி....


லிபியாவில் புகலிடம் பெறுவதற்காக சஹாரா பாலைவனத்தில் பயணம் மேற்கொண்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த 44 அகதிகள் தண்ணீர் இல்லாமல் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கானா மற்றும் நைஜீரியா நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியா நாட்டிற்கு வாகனங்களில் புறப்பட்டுள்ளனர்.

சஹாரா பாலைவனம் வழியாக செல்ல வேண்டும் என்பதால் தேவைக்காக சில லிற்றர் தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக பாலைவனத்தில் சென்றபோது வாகனம் பழுதாகி நின்றுள்ளது. வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்துள்ளது.

ஆனால், நீண்ட பயணம் என்பதால் தண்ணீர் கிடைக்காமல் சோர்வுற்றுள்ளனர். பின்னர், ஒவ்வொரு நபராக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பாலைவனத்தில் 44 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். எனினும், பாலைவனத்தில் இருந்து உயிர் தப்பிய 6 பேர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு ரெட் கிராஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் உதவி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் அகதிகளும் விபத்தில் சிக்கி தொடர்ந்து பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv