உலகிலேயே குண்டான சிறுவன்: ஒரே மாதத்தில் 31 கிலோ எடை குறைப்பு....


உலகிலேயே குண்டான இந்தோனேசிய சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சையின் மூலம் அவனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கரவங் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பதினோரு வயது நிரம்பிய ஆர்யா பெர்மானா என்ற சிறுவன்.

பிறக்கும்போது சாதாரண உடல் எடை கொண்டிருந்த ஆர்யா, தனது ஆறாவது வயது முதல் அதீத உடல் எடை அதிகரிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

சிகிச்சைக்கு முன்னர் வரை 190 கிலோ உடல் எடை கொண்ட இவர் தினமும் ஐந்து வேளை சாப்பிட்டு வந்துள்ளார். மட்டுமின்றி இவரால் அகோரப் பசி காரணமாக உணவை உட்கொள்வதை நிறுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

இருப்பினும், இதே நிலை தொடர்ந்தால் அச்சிறுவனின் உயிருக்கே ஆபத்து என்பதை மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு உணர்த்தியுள்ளனர்.

இதனையடுத்து கடும் முயற்சிக்குப் பின்னர் தமது மகனை சிகிச்சைக்கு உட்படுத்த பெற்றோர்கள் சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் அச்சிறுவனுக்கான மொத்த சிகிச்சையின் முதல் பகுதியான கேஸ்ட்ரிக் ஸ்லீவ் (gastric sleeve) என்ற ஐந்து மணி நேரம் நீடித்த சிறப்பு சிகிச்சையை மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர்.

உலகிலேயே இந்த சிகிச்சையைச் செய்துகொண்ட மிகக் குறைந்த வயதுடையவரும் ஆர்யாவே. இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் 31 கிலோ எடை குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தொடர் சிகிச்சைகள் மூலம் ஆர்யாவின் இரைப்பையின் அளவைக் குறைத்து, மொத்தமாகச் சுமார் 100 கிலோ எடையைக் குறைக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv