ஒரே மனிதன் உடலில் செயல்படும் 2 இதயங்கள்: நடந்தது என்ன?


இருதய கோளாறினால் அவதிப்பட்டு வந்த நபருக்கு இரண்டாவது இருதயத்தை பொருத்தி கோவை மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ளனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த 45 வயது நிரம்பிய நபர் ஒருவர் இருதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அவருடைய இதயம் மிக மோசமான நிலையில் செயல்பட்டு வந்ததை அடுத்து வேறு இதயம் பொருத்தினால் தான் அவரால் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த பெண் ஒருவரின் இதயத்தை தானம் பெற்று அதை அவருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், அவரது உடலில் இருந்த இதயம் 10 சதவீதம் அளவுக்கு இயங்கி வந்தது. எனவே அந்த இதயத்தை அகற்றாமலேயே புதிய இதயத்தை அதன் பக்கத்தில் பொருத்தி வேலையை இரு இதயத்துக்கும் பகிர்ந்து அளிப்பது என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி புதிய இதயத்தை மார்பின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு ஏற்கனவே இருந்த இதயத்தோடு இணைப்பு கொடுக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சையானது 3½ மணி நேரம் தொடர்ந்து நடந்தது. தற்போது அவரது உடலில் 2 இதயங்கள் உள்ளன. அவை இரண்டுமே செயல்பட்டு வருகின்றன.

இதயம் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் இரு இதயமும் சேர்ந்து செய்கின்றன. இதனால், உடலில் 2 இடங்களில் இதய துடிப்பு கேட்ட வண்ணம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த நபருக்கு ஏற்கனவே இருக்கும் இதயத்தை அப்படியே வைத்து விட்டு அந்த இதயத்துக்கு உதவி செய்யும் வகையில் வேறு இதயத்தை பொருத்தி இருக்கிறோம்.

இரு இதயங்களுக்கும் இடையே 5 இடங்களில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவை தற்போது சிறப்பாக செயல்படுகின்றன என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv