20 பேர் பலி....வங்கி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்


ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வங்கி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானில் உள்ள Helmand மாகாணத்தில் இக்கொடூரமான தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஆப்கான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில் வங்கி அருகில் கார் ஒன்று வெடித்து சிதறியதில் 20 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வங்கி பாதுகாவலர்களுடன் தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv