கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி....


அமெரிக்காவை சேர்ந்த 12 வயதான சிறுமி பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக உருவாகியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மிகைலா உல்மர் என்ற இந்த சிறுமி தேன் கலந்த எலுமிச்சை பழச்சாறு தயாரிக்கும் மீ அண்ட் தி. பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த சிறுமி, தேனடைகளில் இருந்து எடுக்கப்படும் தேனுடன் புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து பீ ஸ்வீட் லெமனேட் என்ற பெயரில் இயற்கை பானத்தை தயாரித்து மிகப் பெரியளவில் விற்பனை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் பல இடங்களில் தனது கிளைகளை கொண்டிருக்கும் ஹோல் புட்ஸ் என்ற சிறப்பங்காடி நிறுவனம் தனது 55 வர்த்தக நிலையங்களில் மிகைலாவின் நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது.

இதனை தவிர தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்த சிறுமிக்கு 38.9 லட்சம் ரூபா முதலீடு கிடைத்துள்ளது.

கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் மிகைலாவின் பாட்டி இந்த பானத்தை தயாரித்து வந்துள்ளார். பானம் தயாரிக்கும் இரகசியம் பரம்பரை வழியாக மிகைலாவுக்கு கிடைத்துள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv