நீதி செத்துவிடுமா என்ன.....பாலியல் வன்கொடுமையை ஓவியம் மூலம் நிரூபித்த 10 வயது சிறுமி...


கொல்கத்தாவில் சிறுமி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை வரைபடமாக நீதிபதிக்கு வரைந்து காட்டியதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.

தாயை இழந்த சிறுமி டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும்.

நெருங்கிய உறவினர் ஒருவர் சுமார் இரண்டு வருடங்களாக பலாத்காரம் செய்துள்ளார், இந்த சம்பவம் வெளியே தெரிந்தவுடன் இந்த சிறுமியை பலாத்காரம் செய்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் என்பதாலும், அந்த சிறுமியின் பதில் தெளிவான முறையில் இல்லாத காரணத்தினாலும் குற்றவாளியை பிடிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

இந்நிலையில், நடந்த சம்பவத்தை வரைந்து காட்டுமாறு நீதிமன்றம் அந்த சிறுமியிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி அச்சிறுமி அந்த ஓவியத்தில் கையில் பலூனுடன் ஆடையில்லாமல் நிற்கும் தன்னுடைய படத்தையும், கழற்றிய ஆடையைத் தனியாகவும், தன்னைச் சுற்றியிருந்த வீட்டின் படத்தையும் வரைந்தார்.

இந்த ஓவியத்தின் மூலம் சம்பவம் நடந்த இடம், சிறுமியின் உறவினர் வீடுதான் என்பதையும், அந்த வீட்டுக்குள் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

எனவே இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த நபருக்கு ரூ.10,000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

மேலும் சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு ரூ.3 லட்சம் நிலுவைத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv