டென்னிஸ் அரங்கில் சதம் அடித்த ரோஜர் பெடரர்...


ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றைப்பிரிவு பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது 100வது பட்டத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஜேர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றைப்பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டத்திற்கான போட்டியில் போட்டியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை பெடரர் தோற்கடித்தார்.

அலெக்சாண்டரை அலைக்கழித்து அசத்திய பெடரர் 53 நிமிடங்களில் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஹாலே ஓபனின் ஒற்றையர் பிரிவில் பெடரர் பெறும் ஒன்பதாவது பட்டம் இதுவாகும்.

இந்த பட்டத்தின் மூலம் 100 முறை சர்வதேச டென்னிஸ் தொடர்களில் பட்டம் வென்ற 10வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

92 முறை ஒற்றையர் பிரிவு பட்டமும், 8 முறை இரட்டையர் பிரிவு பட்டமும், 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார் பெடரர். 2005, 2006 ஆகிய இரு ஆண்டுகளில் அதிக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் (12 முறை) என்ற பெருமையையும் ரோஜர் பெடரர் தன்வசமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv