மூன்றாம் உலகப் போர் நடக்குமா? போர்க்கப்பல் கார்ல் வின்சன் பற்றிய அரிய தகவல்கள்...


உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான கார்ல் வின்சன் கொரிய தீபகற்ப பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இக்கப்பலை பற்றிய அரிய தகவல்கள் இதோ,

நிமிட்ஸ் வகை சூப்பர் கேரியர் கப்பலான கார்ல் வின்சன், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமை பெற்றது.
1974ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி தொடங்கிய இதன் கட்டமைப்பு பணிகள் 1975ம் ஆண்டு அக்டோபர் 11ல் முடிவு பெற்றது, நியூபோர்ட் நியூஸ் ஷிப்பில்டிங் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.
1,092 அடி நீளமும், 1,01,300 டன் எடையும் கொண்டது, 90 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை தாங்கி நிற்கும் திறன் கொண்டது.
அமெரிக்காவின் கப்பல்படைக்கான அதிகாரங்களை உருவாக்கியவர்களில் ஒருவரான கார்ல் வின்சனை நினைவுகூறும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டது.
அமெரிக்க கடற்படையில் இணைக்கப்பட்டு 1982ம் ஆண்டு மார்ச் 13ம் திகதி தனது முதல் பயணத்தை தொடங்கியது.
தங்கநிறத்திலான கழுகு இப்போர்க்கப்பலின் முத்திரையாகும், இதன் காரணமாகவே கோல்ட் ஈகிள் எனவும் அழைக்கப்படுகிறது.
இக்கப்பலுக்கு ஒருமுறைஎரிபொருள் நிரப்பினால் 25ஆண்டுகள் வரை செயல்படும். ஒரே நேரத்தில் விமானங்கள் பறக்கவும், தரையிறங்கவும் முடியும்.
கடந்த 2011ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உடல் இந்த கப்பலிலேயே எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv