உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறக்கவில்லை: ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்


உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்தான் என்ற கருத்து தவறானது என ஜேர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

மனிதர்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஜேர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

உலகில் முதலில் தோன்றியது பெண் எனவும், அவர் முதன் முதலாக மத்திய ஆப்பிரிக்காவில் பிறந்ததாகவும் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது.

ஆனால், ஜேர்மன் ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்த கருத்து தவறானது என தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான Jochen Fuss என்பவர் பேசியபோது, ‘குரங்கு மற்றும் வாலில்லா குரங்கு இனத்தில் இருந்து முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வானது சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராக நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால், கடந்த 1944-ம் ஆண்டு Graecopithecus freybergi என்று அழைக்கப்படும் ஒருவித மனித வடிவிலான குரங்கு இனத்தின் இரண்டு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதாவது, கிரீஸ் நாட்டில் தாடை உறுப்பும், பல்கேரியா நாட்டில் ஒரு பல் உறுப்பும் கிடைத்தது. இதனை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்ததில் இந்த இனம் சுமார் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியுள்ளது.

இதன் மூலம், உலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றவில்லை எனவும், அவன் முதன் முதலாக கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தான் தோன்றியிருக்க வேண்டும் என Jochen Fuss தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்தான கூடுதல் ஆராய்ச்சியில் மனித பரிணாம வளர்ச்சி தொடர்பாக அரிய தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv