ஒபாமாவின் முன்னாள் காதலி இவர்தான்: வெளியான தகவல்...


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வாழ்க்கை குறிப்பு குறித்து David Garrow என்பவர் புத்தகமாக தயாரித்துள்ளார்.

The Making of Barack Obama என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புத்தகம் மே 9 ஆம் திகதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இந்த புத்தகத்தை எழுதியுள்ள David Garrow என்ற ஆசிரியர் அதில் இடம்பெற்றுள்ள ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மிச்செல் ஒபாமாவை சந்திப்பதற்கு முன் Sheila Miyoshi Jaher என்ற பெண்ணை ஒபாமா காதலித்துள்ளார்.

தன்னுடைய காதலை Jaher- யிடம் இரண்டு முறை தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்கிறாயா எனக்கேட்டுள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு Jaher - ன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏனெனில், அப்போது தான் தனது அரசியல் பயணத்தை ஒபாமா ஆரம்பித்திருந்தார். அதுமட்டுமின்றி அவர் வயதில் சிறியவராக இருந்த காரணத்தால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது, ஒகியோவில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக Jaher பணியாற்றி வருகிறார். தன்னுடைய காதல் விவகாரம் குறித்து எழுத்தாளர் David Garrow- யிடம் Jaher தெரிவித்துள்ளார்.

நான் வெள்ளை பெண்ணுடன் டேட்டிங் சென்றிருந்தால், ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக நின்றிருக்கமாட்டேன் என ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த புத்தகத்தில் டொனால்ட் டிரம்பினை தனது முன்மாதிரியாக ஒபாமா கருதினார் என்ற தகவலும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv