முதல் வெளிநாட்டு பயணம்: சவுதி அரேபியாவை அதிர வைத்த டிரம்ப்...


சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு நடைபெற்ற மாநாட்டில் பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு டிரம்ப் முதல் வெளிநாடு பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற அரேப் – இஸ்லாம் – அமெரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய டிரம்ப், பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை வளரவிடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர் என்று கூறிய டிரம்ப், அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு எனவும் டிரம்ப் மாநாட்டில் பேசினார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு டிரம்ப் எதிரானவர் என கூறப்பட்டு வரும் நிலையில், தனது முதல் பயணமாக இஸ்லாமிய நாடான சவுதிக்கு சென்று டிரம்ப் உரையாற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv