சிறுமியின் கண், காது, மூக்கிலிருந்து ரத்தம் வழியும் பரிதாபம்: என்ன நோய்?


தாய்லாந்தில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுமிக்கு கண், காது, மூக்கு ஆகிய உடல் பகுதிகளிலிருந்து ரத்தம் அடிக்கடி வெளியேறி வருகிறது.

தாய்லாந்தை சேர்ந்தவர் Phakamad Sangchai (7), இவருக்கு Hematohidrosis என்னும் வினோத நோய் உள்ளது.
Phakamad க்கு இந்த நோய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கத்தின் காரணமாக அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும்.

அந்த சமயத்தில் Phakamadன் மூக்கு, கண்கள், வாய், உள்ளங்கை ஆகிய பகுதிகளிலிருந்து ரத்தம் வெளியேற தொடங்கிவிடும்.

ஆனால் ரத்தம் வெளியேறும் சமயத்தில் அவருக்கு வலி இருக்காது.

Phakamadன் அம்மா தன் மகள் உடல் உறுப்புகளிலிருந்து ரத்தம் வடிவதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதன் மூலம் பொது மக்களிடம் தன் மகளுக்கான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் நம்புகிறார்.

மருத்துவர்களிடம் Phakamad ஆலோசனை பெற்றும் அவர்களால் சிறுமிக்கு இருக்கும் சரியான பிரச்சனை குறித்து அறிய முடியவில்லை.

இதுகுறித்து Phakamad கூறுகையில், என் வாழ்க்கையையே இந்த நோய் பாழாக்குகிறது.

இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகுமோ என கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Phakamadன் அம்மா கூறுகையில், இந்த நிலையிலும் என் மகள் தைரியமாகவும், சந்தோஷமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பத்து மில்லியனில் ஒருவரை தான் இந்த நோய் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv