பெரும்பாண்மை மக்களின் ஆதரவு: தென்கொரியாவின் ஜனாதிபதியாகிறார் மூன் ஜே....


தென்கொரிய தேர்தலில் மூன் ஜே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவில் ஜனாதிபதியாக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மூன் ஜே-இன் மற்றும் ஹாங் ஜூன்-யோ களத்தில் உள்ளனர். முந்தைய அரசு மூலம் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை சரி செய்வதாக மூன் தனது இறுதி பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார். ஹாங் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தென் கொரிய வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து பார்க் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வாக்குப்பதிவுகள் துவங்கி நடைபெற்றது.

கொரிய நேரப்படி மாலை 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 75 சதவீத மக்கள் வாக்குப்பதிவு செய்ததாக தென்கொரிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மூன்-க்கு 41.4 சதவீத மக்களும், மூன்-ஐ எதிர்த்துப் போட்டியிட்ட ஹாங்-க்கு 23 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றனர். வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என்று வேட்பாளர் மூன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியதே அவருக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க காரணம் என்று கருதுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv