தந்தையின் மறைவுக்கு பழிக்குப் பழி: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பின் லேடன் மகன்....


தனது தந்தையை மறைவுக்கு காரணமான அமெரிக்காவை பழி தீர்ப்பேன் என ஒசாமா பின் லேடனின் மகன் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க அரசால் மிகவும் எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்படவேண்டிய சர்வதேச தீவிரவாதி என்ற பட்டியலில் மறைந்த தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின் லேடனின் மகனின் பெயரையும் சேர்த்துக்கொண்டது.

பாகிஸ்தான் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க சிறப்புப் படையினர் கொலை செய்த பின்னர் அந்த இயக்கமானது பெருமளவில் ஒடுங்கிப்போனது.

ஆனால் பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா தற்போது அந்த இயக்கத்தை மறுசீரமைத்து, தமது தந்தையின் மறைவுக்கு பழிக்குப் பழி வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது 28 வயதாகும் ஹம்சா, தமது 22-வது வயதில் எழுதிய கடிதங்களை பறிமுதல் செய்துள்ள அமெரிக்கா, குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.

ஆனால் அல் கொய்தா தீவிரவாத இயக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த எப்.பி.ஐ அதிகாரி Ali Soufan செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் குறித்த கடிதம் தொடர்பாக பேசியுள்ளார்.

அதில் பின் லேடன் போலவே உலகை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை ஹம்சா தொடர்ந்து மேற்கொள்ளவிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரும்பினால் கட்டி உருவாக்கப்பட்டவன் தாம் என ஹம்சா ஒரு கடிதத்தில் குறிப்பிடுவதாக கூறிய அவர், புனிதப் போருக்கு ஆயத்தமாவதே இறைவன் நமக்கிட்டிருக்கும் பணி எனவும் அதை முன்னெடுத்து செல்லவே நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அல் கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக ஹம்சா உருவாகியுள்ளது சமீப காலமாக வெளியாகும் காணொளி துணுக்குகளில் இருந்து புலப்படுவதாக Ali Soufan சுட்டிக்காட்டியுள்ளார்.

பின் லேடன் போலவே நடை உடை பாவனையில் காணொளி காட்சிகளில் தோன்றும் ஹம்சா, அவர் தந்தையை போன்றே பேசுவதாகவும், பின் லேடன் பயன்படுத்தும் வார்த்தைகளையே ஹம்சாவும் பயன்படுத்தி வருவதாக Ali Soufan தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் 4 ஒடியோ செய்திகளை வெளியிட்டுள்ள ஹம்சா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் தமது தந்தைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக அமெரிக்காவை பழி தீர்ப்பதே தமது இயக்கத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளதை Ali Soufan சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv