பிரான்ஸ் மக்கள் அதிகம் வெறுக்கும் உலக தலைவர் யார்? சர்வே முடிவுகள்


பிரான்ஸ் மக்கள் அதிகம் விரும்பாத மற்றும் அவர்களிடத்தில் பிரபலமில்லாத உலக தலைவராக டொனால்டு டிரம்ப் இருப்பது சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸின் Suffolk பல்கலைகழகம் பிரான்ஸ் மக்களிடத்தில் எந்த உலக தலைவர் அதிக பிரபலமில்லாமல் இருக்கிறார்கள் என்னும் கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது.

அதில், அதிகபட்சமாக 82 சதவீதம் பேர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிரான்ஸில் பிரபலமில்லாதவர் என வாக்களித்துள்ளனர்.

டிரம்புக்கு அடுத்த இடத்தில் ரஷ்ய ஜனாதிபதிக்கு 70 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் சீனாவின் ஜனாதிபதி ஜின்பிங்குக்கு 43 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

அதற்கடுத்த இடங்களில் 40 சதவீததுடன் பிரித்தானிய பிரதமர் தெரசா மேவும், 22 சதவீதத்துடன் ஜேர்மனினின் சேன்சிலர் ஏஞ்சலா மெர்கலும் உள்ளனர்.

இதில் குறைந்த சதவீத வாக்குகள் பெற்று பிரான்ஸ் மக்களிடத்தில், மிக பிரபலமான தலைவராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இருப்பது தெரியவந்துள்ளது

இவர் பிரபலமில்லை என வெறும் 7 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv