மூடுவிழா காணும் சிறைச்சாலைகள்: எந்த நாட்டில் தெரியுமா?


குற்றவாளிகளை அடைக்க சிறைச்சாலைகளில் இடமில்லாமல் தவித்து வரும் நாடுகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டின் சிறைச்சாலைகள் வெகுவாக மூடப்பட்டு வருகின்றன.

குற்றச் சம்பவங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்லும் நாடுகளுக்கு மத்தியில் நெதர்லாந்து நாட்டில் குற்றச்சம்பவங்கள் குறைவதுடன், குற்றவாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றவாளிகளின் எண்ணிக்கை அந்நாட்டில் குறைந்து வருவதால், அங்குள்ள பெரும்பாலான சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.

நெதர்லாந்து நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 19 சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்குள்ள சிறைச்சாலைகளில் ஒன்றிரண்டு பேர் தான் உள்ளனராம்.

கடந்த 2005-ஆம் ஆண்டு தரவுகள்படி, 14,468 பேர் சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு கணக்குப்படி, 8,245 பேர் தான் அந்நாட்டு சிறைகளில் இருந்தனராம்.

மேலும் தற்போது அந்த எண்ணிக்கை இரட்டை இலக்கமாக குறைந்துள்ளதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி தற்போது சிறையில் இருப்பவர்களுக்கு, அரசு மறுவாழ்வு அளித்து வருவதால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv