ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பலி: அமெரிக்கா அறிவிப்பு....


ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் தலைவர் அப்துல் ஹாசிப் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆப்ஸ்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் ராணுவ மருத்துவமனை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அந்த இயக்கத்தின் தலைவர் அப்துல் ஹாசிப் தான்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள நங்கர்ஹர் பகுதியில் சமீபத்தில் ஐ.எஸ் இயக்கத்தினருக்கும், சிறப்பு படையினருக்கும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அந்த தாக்குதலில் அப்துல் ஹாசிப் கொல்லப்பட்டதாக ஆப்கான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்

ஆப்கன் ராணுவ ஜெனரல் ஜான் நிகோல்சனும் இதை உறுதி செய்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv