உறவின்போது காதலனின் கழுத்தை அறுத்து கொன்ற காதலி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


ஜேர்மனி நாட்டில் உடலுறவின்போது காதலனின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலிக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் Alex H மற்றும் Gabi P என்ற காதலர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், ஒருமுறை காதலனை வீட்டை விட்டு காதலி வெளியேற்றியுள்ளார்.

எனினும் காதலியை தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த காதலன் அவருடன் மீண்டும் தங்குவதற்கு சம்மதம் பெற்றுள்ளார்.

ஆனால் காதலனின் தொந்தரவை தாங்க முடியாது காதலி அவரை கொலை செய்ய திர்மானித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டபோது காதலனின் சம்மதத்தின்பேரில் அவரை கட்டிலுடன் கயிற்றால் கட்டியுள்ளார்.
இதுவும் ஒருவகையான காதல் விளையாட்டு என நினைத்த காதலன் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர், காதலனின் இரண்டு கண்களையும் துணியால் கட்டி மூடியுள்ளார்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணராமல் காதலன் படுக்கையில் படுத்திருந்திருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த மரத்தை அறுக்கும் இரும்பு ரம்பத்தை எடுத்து வந்து காதலனின் கழுத்தை அறுத்து காதலி கொலை செய்துள்ளார்.

பின்னர், காதலனின் உடலை யாரும் கண்டுபிடிக்காத வகையில் மறைத்து வைத்துள்ளார். நீண்ட நாள் விசாரணைக்கு பின்னர் காதலனின் உடல் 2016-ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காதலி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த நபருக்காக வாதாடிய வழக்கறிஞர் காதலிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், விசாரணையின் முடிவில் மனநல ரீதியாக பாதிக்கப்பட்ட காதலி காதலனை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டவில்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது எனவும், குறைந்தபட்சமாக 12 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv