ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பதவி: பிரான்ஸ் ஜனாதிபதிக்கு குவியும் பாராட்டுக்கள்....


பிரான்ஸ் நாட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அரசாங்கத்தில் பதவி வழங்கி வருவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக கட்சி துவங்கிய இம்மானுவேல் மேக்ரான் 61 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘எனது தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு சம அளவில் பதவிகள் வழங்கப்படும்’ என இம்மானுவேல் உறுதிமொழி அளித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை தற்போது அவர் மிகச்சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

ஒட்டுமொத்தமாக உள்ள 22 கேபினட் அமைச்சர்களில் 11 பெண்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளார்.

குறிப்பாக, Sylvie Goulard பாதுகாப்பு துறையும், Laura Flessel என்ற முன்னாள் விளையாட்டு வீராங்கனைக்கு விளையாட்டு துறையும், Muriel Pénicaud என்பவருக்கு தொழிலாளர் துறையும் Agnes Buzyn சுகாதார துறையும் Annick Girardin என்ற பெண்மணிக்கு வெளிவிவகாரத்துறையையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், யூன் மாதம் நாடு முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட 428 வேட்பாளர்களை ஜனாதிபதி அறிவித்துள்ளார். இவர்களில் பாதி பேர் பெண்கள் ஆவார்கள்.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே போல் தற்போதையை ஜனாதிபதியும் பெண்களுக்கு சம அளவில் பதவிகள் வழங்கி பெண்ணுரிமையை நிலைநாட்டுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv