பிறந்ததும் உயிரிழந்த குழந்தை: தாயார் மீது கொலை வழக்கு பதிவு....


கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Michelle Rice(31) என்பவர் வசித்து வருகிறார்.

இவருடைய கணவர் பிரிந்து சென்று விட்டதால் இருவருக்கும் பிறந்த மகன் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனியாக இருந்த தாயார் கர்ப்பம் ஆனதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், மார்ச் 29-ம் திகதி தாயார் பொலிசாரை அவசரமாக தொடர்புக்கொண்டுள்ளார். ‘குழந்தையிடம் எவ்வித அசைவும் இல்லை. உடனடியாக உதவிக்கு வாருங்கள்’ என அழைத்துள்ளார்.

தகவலை பெற்ற பொலிசார் மருத்துவரை அழைத்துக்கொண்டு தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதனை செய்தபோது அது ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6-ம் திகதி பரிசோதனை முடிவுகளை பொலிசாருக்கு அனுப்பியுள்ளனர்.

அதில், ‘ஒருவித மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்ததன் காரணமாக தான் குழந்தை உயிரிழந்துள்ளது’ என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பரிசோதனை முடிவுகள் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியபோது இதற்கு பின்னால் தாயார் இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த குழந்தைக்கு தாயாரின் முன்னாள் கணவர் தான் தந்தையா என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எனினும், தாயார் மீது சந்தேகம் வலுத்துள்ளால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv