உயிரிழந்தவர்களுக்காக அர்ப்பணிக்கிறோம்: நெகிழ வைத்த மான்செஸ்டர்...


யூரோப்பா லீக் கிண்ணத்தை கைப்பற்றிய மான்செஸ்டர் யுனைடெட் அணி, இதை மான்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சுவீடன் தலைநகர் Stockholmல் உள்ள Friends Arena மைதானத்தில் நடைபெற்ற யூரோப்பா லீக் இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியும், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதின.

ஆட்ட நேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என எஜக்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டி ஆரம்பித்த 18வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் Paul Pogba முதல் கோல் அடித்தார்.

இதனையடுத்து 48வது நிமிடத்தில் Henrikh Mkhitaryan இரண்டாவது கோல் அடித்தார்.


இறுதிவரை போராடிய எஜக்ஸ் அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை.

வெற்றிக்கு பின் பேசிய மான்செஸ்டர் வீரர் Paul Pogba, மான்செஸ்டருக்காக தான் நாங்கள் வென்றோம். அவர்களுக்காக, நாட்டுக்காக நாங்கள் பணியாற்றினோம்.

பிரித்தானியாவிற்காக, மான்செஸ்டருக்காக, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக தான் நாங்கள் விளையாடினோம்.

இந்த யூரோப்பா லீக் கிண்ணத்தை மான்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv