கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்த பெண்: ஷொப்பிங் சென்றபோது நிகழ்ந்த அதிசயம்....


கனடா நாட்டில் கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகரில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் வசித்து வந்த Ashleigh Miller Cross என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, திடீரென உடலில் மாற்றம் ஏற்பட அங்குள்ள ஊழியர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

பின்னர், குளியலறைக்கு கொண்டு சென்ற பிறகு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

பொருட்கள் வாங்க சென்றுவிட்டு குழந்தையுடன் வீடு திரும்பியவரை கண்டு குடும்ப உறுப்பினர்கள் வியப்படைந்துள்ளனர்.

சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்தவற்றை தாயார் கூறிய பிறகு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுக் குறித்து தாயார் பேசுகையில், ‘பத்து மாதங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

முதல் பிரசவத்திற்கு பிறகு எனது உடல் எடையில் எவ்வித மாற்றம் ஏற்படவில்லை. வயிறு குண்டாகவே இருந்துள்ளது. இதனால் கர்ப்பம் தரித்ததை நான் உணரவே இல்லை.

இதுமட்டுமில்லாமல், வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகளும் எனக்கு ஏற்படவில்லை.

ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ளது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என தாயார் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv