இது தான் தன்னம்பிக்கை! 72 வயதில் படித்து பட்டம் பெற்ற பாட்டி...


அமெரிக்காவை சேர்ந்த 72 வயது முதிய பெண்மணி தள்ளாத வயதிலும் படித்து பட்டம் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் டார்லீன் மல்லின்ஸ் (72) இவர் கடந்த 1962ல் தனது இளமை பருவத்தில் டென்னஸி பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு படித்து வந்தார்.

அபோது உடன் படித்த ஜான் என்பவரை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டதையடுத்து தனது படிப்பை டார்லீன் பாதியிலேயே நிறுத்தினார்.

பின்னர் வீட்டு நிர்வாகம் மற்றும் தனது குழந்தைகளை வளர்ப்பதில் அவர் கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் விட்டு போன படிப்பை டார்லீன் கடந்த 2013ல் மீண்டும் தொடர்ந்தார்.

நான்கு வருட பட்டபடிப்பான ஆப்ரிகன் ஸ்டடிஸ் மற்றும் தொடர்பியல் துறையை அவர் தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.

தற்சமயம் அந்த துறையில் தேர்ச்சி பெற்றுள்ள டார்லீன் கவுரவ பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv