தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட ஆளுநர்: 1 பவுண்ட் இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்...


பிரித்தானிய நாட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கும் கூடுதலாக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1 பவுண்ட் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நைஜீயா நாட்டை சேர்ந்த James Ibori என்பவர் சிறுவயது முதல் பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். தாய்நாட்டில் பிழைக்க முடியாது என்பதால் 1980-களில் பிரித்தானிய நாட்டில் குடியேறியுள்ளார்.

லண்டன் நகரில் உள்ள DIY என்ற வர்த்தக மையத்தில் ஊழியராக பணியில் சேர்ந்தார். ஆனால், இந்த கடையிலும் அவர் தனது திருட்டு தொழிலை விடவில்லை.

1991-ம் ஆண்டு திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தாய்நாடான நைஜீரியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

தாய்நாடு திரும்பிய அவர் அரசியலில் தீவிரமாக ஈடுப்பட்டார். பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து 1999-ம் ஆண்டு டெல்டா மாகாணத்தின் ஆளுநராக தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தார்.

உயரிய பதவி கிடைத்ததும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சுமார் 57 மில்லியன் பவுண்ட் வரை அரசு பணத்தை திருடியுள்ளார்.


METROPOLITAN POLICE
இதே சமயம், பிரித்தானிய நாட்டில் உள்ள தனது வழக்கறிஞர் ஒருவர் மூலம் சொந்தமாக விமானம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

இதில் சுமார் 50 மில்லியன் பவுண்ட் வரை ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இவரை கைது செய்ய லண்டன் பொலிசார் நைஜீரியாவிற்கு பயணமாகியுள்ளனர்.

ஆனால், நைஜீரியாவில் இருந்து தப்பிய இவர் துபாய் நாட்டிற்கு சென்று தலைமறைவானார். துபாய் பொலிசாரின் உதவியுடன் கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிரித்தானிய நாட்டிற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பிரித்தானியாவில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20-ம் திகதி தண்டனை காலம் முடிவடைவதால் இவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சில சட்ட சிக்கல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் விடுதலை செய்ய முடியாமல் 42 மணி நேரம் தாமதமாக அவரை விடுதலை செய்துள்ளனர்.

சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து 4,000 பவுண்ட் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

ஆனால், நபரிடம் இருந்து 50 மில்லியன் பவுண்டை இதுவரை திரும்ப பெறாத காரணத்தினால் அவருக்கு 1 பவுண்ட் இழப்பீடு மட்டுமே வழங்குமாறு நேற்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறையில் இருந்து தற்போது விடுதலை ஆகியுள்ள நபர் கடந்த பெப்ரவரி மாதமே நைஜீரியா நாட்டிற்கு பயணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv