17 வருடங்களாக 2 ரூபாய் சம்பளம் வாங்கிய நபர்...


தமிழகத்தில் நபர் ஒருவர் கடந்த 17 வருடங்களாக 2 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து, தினந்தோறும் வெறும் 2 ரூபாய் என்ற கணக்கில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறையில் துப்புரவு பணியை செய்ய தொடங்கியிருக்கிறார்.

இந்த 2 ரூபாய் சம்பளம் காலப்போக்கில் கூடிவிடும் என்ற நம்பிக்கையில், அவர் அந்த பணியினை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே வந்துள்ளார்.

ஆனால் ஏமாற்றம் தான் மிச்சமானது, 17 வருடங்கள் கடந்தும் அவரது சம்பளம் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் தனது பணியையும், சம்பளத்தையும் ஒழுங்குப்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் திகதி வெளியான உதவியாளர் பணிக்கான விளம்பரம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv