ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புது 100 சாதனை படைத்த டோனி


டெல்லி அணிக்கெதிராக ஷ்ரேயாஸ் அய்யரை கேட்ச் எடுத்து அவுட்டாக்கியதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 100 பேரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றி டோனி சாதனைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டது இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.). ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற இந்த டி20 லீக் தொடர் தற்போது 10-வது ஆண்டை எட்டியுள்ளது.

10-வது ஐ.பி.எல் தொடரின் 52-வது போட்டி டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. புனே அணிக்கெதிராக டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணியின் 3-வது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உனத்கட் பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

டோனி இந்த கேட்ச்-ஐ பிடித்ததன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 100 பேரை கேட்ச், ஸ்டம்பிங் மற்றும் ரன்அவுட் மூலம் அவுட்டாக்கி சாதனைப் படைத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv