யாசிதி சமூகத்தினர் 10,000 பேரை வேட்டையாடிய ஐ.எஸ் தீவிரவாதிகள்...


இதுவரை ஐ.எஸ் தீவிரவாதிகளால் 10,000 யாசிதி சமூக சிறுவர்கள் உள்ளிட்ட பெண்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் இருந்து யாசிதி சமூகத்தினர் கூண்டோடு மாயமாகி வந்த விவகாரத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற உறுதியான தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், இதுவரை 9,900 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஒரு சில நாட்களில் இந்த அதி கொடூர செயல் நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் 3,100 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதை குறித்த ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். மட்டுமின்றி இந்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோரை துப்பாக்கியால் சுட்டும், தலையை துண்டித்தும், உயிருடன் எரித்தும் கொலை செய்துள்ளனர்.



மேலும் ஒருபகுதியினர் உணவின்றி பட்டிணியாலும், தண்ணீரின்றியும் மற்றும் படுகாயங்களினாலும் உயிரிழந்துள்ளதாக பட்டியலிட்டுள்ளனர்.

இளைஞர்களை கொத்துக் கொத்தாக கொன்றொடுக்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள், யாசிதி சிறுவர்களையும் குறி வைத்து வேட்டையாடியுள்ளனர்.

குறித்த காலகட்டத்தில் 6,800 யாசிதி சமூகத்தினரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக கூறும் ஆய்வாளர்கள், இதில் நான்கில் மூன்று பகுதியினர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலத்திலும் மாயமானவர்கள் பட்டியலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட யாசிதி இனப்படுகொலையில் மிகக்கடுமையாக பாதிப்புக்குள்ளானது 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களே என சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள், ஐக்கிய நாடுகள் மன்றம் உரிய ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு யூன் மாதம் ஐ.நா மன்றத்தினரால் யாசிதி சமூகத்தின் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலை என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆய்வு மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv