உலகில் ஏற்படவுள்ள மற்றுமொரு அதிசயம்!


நினைத்தும் பார்க்க முடியாதளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. கற்பனை மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் அறிவியல் மூலம் சாத்தியமாகியுள்ளன.

அந்த வகையில் இன்றிலிருந்து 45 ஆண்டுகளுக்கு பின்னர் எவ்வாறான சாதனங்கள், வியக்க வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கலாம் என்பதில் அறிவியலாளர்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

அதில் ஒன்றுதான் முப்பரிமாண கட்டமைப்புக்களை பொருத்தி 4.8 கிலோ மீற்றம் உயரமான கட்டடம் ஒன்றை அமைக்கும் யோசனையை அமெரிக்காவின் ஆர்கோனிக் பொறியியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


1962ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான "ஜெனற்றன்" என்ற தொடரில் மேகங்களை ஊடறுத்து செல்வதை போன்று வானுயர்ந்த கட்டிடங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

அதன்பால் ஈர்க்கப்பட்ட ஆய்வாளர்கள் தற்போது அதனை மெய்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புதிய கட்டிட அமைப்பிற்கு "ஜெனற்சன்ஸ்" என பெயரிடப்பட்டுள்ளது.

2062ஆம் ஆண்டு இதனை உருவாக்கும் முயற்சியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். "ஜெனற்சன்ஸ்" கட்டிடத்தினை முப்பரிமாணக் கட்டமைப்புகளை பொருத்துவதன் ஊடாக நிர்மாணிக்க ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


மாற்றமடையும் காலநிலை மற்றும் காற்று என்பவற்றுக்கு ஈடுகொடுத்து நிலைத்து நிற்கும் வகையில், இந்த முப்பரிமாணக் கட்டமைப்புக்களை ஆய்வுகள் ஊடாக உருவாக்க ஆய்வாளர்கள் முயற்சித்துள்ளனர்.

மேலும் இந்தக் கட்டிடத்தின் உட்புறம் வளிமண்டல மாசுக்களை சுத்தம் செய்யும் வகையில் அமையவுள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடங்களை அமைப்பதில் நாடுகளுக்கு இடையில் போட்டித் தன்மை நிலவியுள்ளன.

அந்த வகையில் தற்போது டுபாய் நாட்டில் உள்ள "புர்ஜ் கலீபா" கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடமாக அமையப்பெற்றுள்ளது. இவற்றினை ஓரங்கட்டும் வகையில் "ஜெனற்சன்ஸ்" கட்டமைப்பு அமையப்பெறவுள்ளது.

எவ்வாறாயினும், இது சாத்தியப்படுமா என்பது தொடர்பில் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், 2062ஆம் ஆண்டு இதனை சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv