பிறப்பிலேயே எச்ஐவியால் பாதிப்பு... இன்றோ அழகியாகி சாதனை....


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால், வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை, நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வெற்றி நடைபோடுபவர்கள் பலர் உள்ளனர்.

நிறைகளை வைத்துக்கொண்டே சாதிக்க தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில், தங்களுக்குள் இருக்கும் குறைகளை நிறைகளாக மாற்றி சாதனை படைத்துக்கொண்டிருப்பவர்களின் ஒருவர் தான் Horcelie Sinda Wa Mbongo (22).
காங்கோவை பிறப்பிடமாக கொண்ட இவருக்கு 11 வயது இருக்கும்போது எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இவர், 2017 ஆம் ஆண்டிற்கான மிஸ் காங்கோ பிரிட்டன் அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட இவருக்கு இந்த அழகி பட்டம் சொல்லமுடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட எனது கதையை கேட்டு பலரும் வருத்தமடைந்தார்கள். இது முக்கியமான ஒன்று. அழகி பட்டம் பெற்ற எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ள இவர், தற்போது எச்ஐவி தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என கூறியுள்ளார்.

காங்கோவில் எச்ஐவி தொற்றுடன் 370,000 பேர் வாழ்ந்து வருகின்றனர் என ஐநா கணிப்பில் தெரியவந்துள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv