பிரித்தானியாவிலிருந்து அதிகளவில் வெளியேறும் புலம் பெயர்ந்தவர்கள்! ஏன்?


பிரித்தானியாவில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருக்கும் இந்தியர்கள் தாங்களாகவே சொந்த நாட்டுக்கு அதிகளவில் திரும்பி வருகின்றனர்.

பிரித்தானியாவில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். இந்நிலையில், பலர் முக்கியமாக இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர்.

அதாவது சட்ட விரோதமாக பிரித்தானியாவில் குடியேறியவர்கள், தங்கள் விசா காலம் முடிந்த பின்னரும் பல காலம் அங்கு தங்கியிருப்பவர்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், சரியான ஆவணங்கள் இன்றி இனியும் அங்கு தங்கினால் வேலை கிடைக்காது, வங்கி கணக்கு தொடங்க முடியாது மற்றும் பல வசதிகள் கிடைக்காது என அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 5365 இந்தியர்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறிவுள்ளனர்.

அதே ஆண்டில் மொத்தமாக வெளியேறிய வேறு நாட்டவர்களின் எண்ணிக்கையில் இது 22 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv