வரலாற்றை மாற்றியமைக்கும் புதுமை! பிரித்தானியாவில் இருந்து சீனா செல்லும் முதல் ரயில்...


பிரித்தானியாவிலிருந்து முதல் முறையாக சீனாவுக்கு ரயில் பயணம் ஒன்று நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்து ரயில் சீனாவின் சேஜியெங் பகுதியை சென்றடைய 17 நாட்கள் வரையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில், வாகனங்களின் மேலதிக பகுதிகள், குடிபானங்கள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள், விட்டமின், மற்றும் மதுபானங்கள் ஆகியவைகள் உள்ளடகப்பட்டுள்ளது.

இந்த ரயில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மன், ரஷ்யா மற்றும் கஸ்கஸ்தான் ஆகிய நாடுகளை கடந்து பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய 7 ஆயிரத்து 500 கிலோ மீற்றர் தூரம் வரை இந்த ரயில் பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் முதல் முறையாக இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv