உலகில் மரணத்தை விட மோசமானவைகள் இவைதான்......


இந்த உலகில் மனிதராய் பிறந்தவர்களுக்கு நிச்சயம் இறப்பு என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அது எப்போது தங்களுக்கு நேரும் என்பதை யாரும் அறிந்திருக்க முடியாது.

இறப்பு ஒன்றுதான் மிக மோசமானது என கருதப்பட்டு வரும் நிலையில், அந்த இறப்பை விட மோசமானது நாம் உயிரோடு இருக்கும் போதே இந்த உலகில் நாம் அனுபவிக்கும் சில மோசமான சூழ்நிலைகள் தான்.

இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு, இறந்துவிடுவதே மேல் என மனிதனை சிந்திக்க வைக்கும் சில இக்கட்டான சூழ்நிலைகள் இதோ,

பக்கவாதம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்க்கை முழுக்க முழுக்க படுக்கையைத்தான் சார்ந்து இருக்கிறது.

இவர்களால் எதுவும் செய்ய இயலாத காரணத்தால் படுக்கையில் இருக்கும் இவர்களின் இதயம் துடித்தாலும், இவர்களுடைய உணர்வுகள் உயிரற்றவையே.

மரியாதையுடன் வாழ்தல்

சுய மரியாதை மற்றும் கண்ணியத்தோடு வாழ்தல் என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. இந்த சமூகத்தில் தனக்கான சுயமரியாதையை இழக்கும் வகையில் சம்பவங்கள் அரங்கேறும்போது, எதற்காக நாம் இந்த சமூகத்தில் வாழவேண்டும் என்ற கேள்வி அவனுக்குள் எழ ஆரம்பிக்கிறது.

மற்றவர்களை சார்ந்திருத்தல்

பிறர் உதவியின்றி தன்னால் இயன்ற அளவு சுதந்திரமாக வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுவான். ஆனால், நோய்வாப்பட்டு படுக்கையில் இருக்கும்போது, அடிப்படை தேவைகள் முதல் அனைத்திற்கும் மற்றவர்களை சார்ந்திருப்பது அவர்களின் மனதினை புண்படைய செய்கிறது.

இப்படிப்பட்டவர்களின் மனதில், நாம் மற்றவர்களுக்கு சுமையாக இருக்கிறோமா என்ற எண்ணம் தான் மேலோங்க செய்யும்.

உங்களுக்கு பிரியமானவர்களை இழத்தல்

இந்த உலகில் நமக்கு பிடித்தமானவர்கள் இறந்துவிட்டால், நாமும் இறந்துவிட வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் நாம் உயிருக்கு உயிராக கருதிய நபர்கள், இந்த உலகில் இல்லை என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும், நாமும் எதற்காக வாழ்கிறோம் என்ற எண்ணம் தான் மேலாங்கும்.

தனிமை வாழ்க்கை

இந்த உலகில் மோசமான ஒன்று தனிமை. ஒரு மனிதனை பல்வேறு கோணங்களில் ஆட்டுவிக்கும் திறமை இந்த தனிமைக்கு உண்டு. உலகில் சில தற்கொலை சம்பவங்கள் நிகழ்வதற்கு தனிமையும் ஒரு காரணமாக இருக்கிறது.

பெற்றெடுத்த குழந்தைகள், உறவினர்களால் நிராகரிகப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் ஒரு மனிதனின் வாழ்க்கை மிகவும் மோசமான ஒன்று.

உடல் மற்றும் மனரீதியான துன்பங்கள்

உலகில் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். யாரேனும் நம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? நாமும் இந்த உலகில் நிம்மதியாக வாழ்வோமா? என்ற எதிர்பார்ப்புகளோடு நகர்கிறது இவர்களது வாழ்க்கை.

இவர்களது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் நரகமான ஒன்றுதான்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv