வட கொரியா விவகாரம்: டொனால்டு டிரம்ப் திடீர் ஆலோசனை...


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வட கொரியா விவகாரம் குறித்து சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொனால்டு டிரம்பிடம் பேசிய சீன பிரதமர் ஜீ ஜின்பிங், சீனா வடகொரியாவின் அணு ஆயுதங்களுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கிறது.

ராணுவ நடவடிக்கைகள் அல்லது கிம் ஜாங் உன் ஆட்சியை அகற்றுதல் நடவடிக்கைக்கு மாறாக, உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியாவுக்கு (சீனாவின் நட்பு நாடு) சீனா அழுத்தம் கொடுக்கும் என நம்புவதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியதாவது, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடாதீர்கள் என வடகொரியாவை வலியுறுத்த ஒத்துக்கொண்டுள்ளார்.

டொனால்டு டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து ஷின்சோ அபே செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை பிரச்சனையானது சர்வதேச நாடுகளுக்கு மட்டும் மிகவும் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை கிடையாது, எங்களுடைய நாட்டிற்கும்தான் என கூறிஉள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv